செய்திகள்

கடவுள் மற்றும் தாய் தந்தையின் காலில் மட்டும்தான் விழ வேண்டும் – ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று 3வது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் மதுரை, விருதுநகர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.ரசிகர்களை சந்திப்பதற்கு முன் மேடையில் அவர் பேசும்பொழுது, ரசிகர்களை சந்திப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளம். நான் சின்ன வயசில் கன்னட நடிகர் ராஜ்குமார் ரசிகனாக இருந்தேன்.
ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதனால் வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.கடவுள், தாய், தந்தை மற்றும் பெரியோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற வேண்டும். எனது காலில் விழ வேண்டாம் என ரசிகர்கள் முன் பேசினார்.அதனை தொடர்ந்து ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.(15)123