செய்திகள்

ரஜினிகாந்த், சானியா மிர்சா, பிரியங்கா சோப்ராவுக்கு பத்ம விருதுகள்

நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த 112 பேர் நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த மார்ச் 28 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 51 பேருக்கு ஏனைய பத்ம விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட மீதமுள்ள 56 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் நடிகர் ரஜினிகாந்த், புற்றுநோய் சிகிச்சை நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகளும், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளையும் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது.

padma Padma-Priyanka-1024x681 Padma-Rajini-1024x772 Padma-Sania-1024x804

n10