ரஜினியின் அடுத்த படம்
ரஜினியின் தர்பார் படம் கடந்த வாரம் வெளியாகி மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினி தன்னுடைய 168வது படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்திற்கான படப்பிடிப்பு அமைதியாக நடந்துவரும் நிலையில் படத்தில் ரஜினியின் அறிமுக பாடல் குறித்து தகவல் வந்துள்ளது.
அதில் இந்த பட இன்ட்ரோ பாடலை விவேகா அவர்கள் எழுத, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் தான் பாடுகிறாராம். இதனை பாடலாசிரியல் விவேகாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட போன்ற படங்களில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
90களில் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்த எஜமான், முத்து, படையப்பா ஆகிய படங்கள் கிராமப்புற பின்னணியில் அமைந்திருந்தன. வீரம், விஸ்வாசம் என கிராமப்புற பின்னணியில் மாஸ் ஹீரோக்களுக்கான கதையமைத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவா, ரஜினிக்கும் அப்படி ஒரு திரைக்கதையை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. -(3)




