செய்திகள்

ரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழுவிவரம் வெளியாகியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 164 ஆவது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 28 ஆம் தேதி அன்று மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் காலா படத்தை, பா.இரஞ்சித் இயக்குகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒரே இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்தான். அவருக்குப் பின் இந்தப் பெருமையைப் பெற்றுள்ள இயக்குநர் பா.இரஞ்சித் மட்டுமே. காலா படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார்.
இவர்களுடன், ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணையும் நான்காவது படம் இது. கபிலன், உமாதேவி பாடல்கள் எழுதுகின்றனர். ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
‘காலா’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மே 28 ஆம் தேதி மும்பையில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.(15)201705281747235298_Kaala-Shooting 4-X._L_styvpf 201705281747235298_Kaala-Shooting X._L_styvpf 201705281747235298_Rajini-Kaala-movie-full-cast-details-revealed_SECVPF