செய்திகள்

ரஞ்சனுக்கு காத்திருக்கும் முக்கிய பதவி!

இன்று சிறையில் இருந்து விடுதலையாகும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசாங்கத்தினால் முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இன்று விடுதலை செய்யப்படவுள்ளார்.

இதன்படி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் இன்று கையொப்பமிட்டிருந்தார்.

இந்நிலையில் இவர் விடுதலையான பின்னர், புதிய பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

-(3)