செய்திகள்

ரணிலின் வெற்றிக்காக உழைக்கும் மஹிந்த அணி!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக மறைமுகமாக உதவி செய்து வருவதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அவர்கள் ஐ.தே.கட்சிக்கு ஆதரவளிப்பதனாலேயே கட்சியின் 65வது நிறைவு தினத்தைக் கொண்டாடும் நாளைய நிறைவாண்டு விழாவை பகிஷ்கரிக்க தீர்மானித்திருப்பதாக, அக்கட்சியிலிருந்து வெளியேறி தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இன்று (சனிக்கிழமை) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பிரதான இரு கட்சிகளையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ள தேசிய அரசாங்கத்திற்கு குறுக்கே வருவதை மஹிந்த அணியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன், தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைகோர்த்திருக்கின்ற போதிலும், தமது அடையாளத்தை இழக்கவில்லை என்றும் கூறினார்.

N5