செய்திகள்
ரணிலுக்கும் மகிந்தவுக்குமிடையே டீல் : ஜே.வி.பி குற்றச்சாட்டு
ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையே ஒப்பந்தமொன்று காணப்படுவதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மகிந்தவின் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றப்படுவதாகவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். -(3)




