”ரணில் ஐ.தே.கவில் இருந்து விலகினால் எமது வேட்பாளராக்கலாம்”
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் எந்தவொரு நபரின் பெயரையும் முன்வைக்கவில்லை. சரியான நபர் சரியான நேரத்தில் முன்வைக்கப்படுவார். எங்கள் கட்சி மொட்டு சின்னத்தின் கீழ் வேட்பாளரை முன்னிறுத்தும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் மொட்டு சின்னத்திலேயே முன்னிறுத்தப்படுவார். இதனால் ரணில் விக்கிரமசிங்க எமது வேட்பாளராக வேண்டுமென்றால் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி மொட்டு கட்சியின் உறுப்புரிமைய பெற வேண்டும். அப்படியானால் பரிசீலிப்போம்” என்றார்.
-(3)




