செய்திகள்

ரணில் – மைத்திரி அரசாங்கதிற்குள் உள்ள திருடர்கள் தொடர்பாகவும் விசாரணை வேண்டும் : ஜே.வி.பி கோரிக்கை

ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்குள்ளும் ஊழல் மோசடிகாரர்கள் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பான விசாரணைக்கு அரசாங்கத்திலுள்ளவர்களே தடையாக இருப்பதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத்தே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தற்போதைய அரசாங்கதிலுள்ள அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு முறைப்பாடுகள் உள்ளன. ஆனால் அது தொடர்பாக விசாரணை நடப்பதில்லை. இரண்டு கட்சிகளும் தங்களின் கட்சியினரை பாதுகாக்கவே முயற்சிக்கின்றன. இந்த குற்றச்சாட்டில் பாரியளவிலானக குற்றச்சாட்டை கொண்ட அமைச்சர்களும் உள்ளனர். இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால் ராஜபக்‌ஷ ஆட்சியில் நடந்த ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சட்டம் செயற்படுத்தப்படுவதை போன்று தற்போதைய அரசாங்கதிலுள்ளவர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும். இதற்கான பொறுப்பை ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்க வேண்டும். – (3)