செய்திகள்

ரவிராஜ் எம்.பி எவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார் ? : பிரதான சாட்சியாளர் நீதிமன்றத்தில் விபரிப்பு

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை வழக்கின் பிர­தான சாட்­சி­யான முன்னாள் பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரித்­தி­விராஜ் மனம்­பேரி நேற்று நீதிமன்றத்தில் அவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக சாட்­சி­ய­ம­ளித்தார்.
கொழும்பு மேல் நீதி­மன்றில் சிங்­களம் பேசும் சிறப்பு ஜூரிகள் சபை முன்­னி­லையில் இடம்­பெற்று வரும் வழக்கில், சிரேஷ்ட பிரதி சொலி­சிட்­டரர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரி­யவின் நெறிப்­ப­டுத்­தலில் அவர் சாட்சியமளித்தார்.
இது­வரை தனக்கு கருணா குழு­வி­ன­ரி­ட­மி­ருந்து உயிர் அச்­சு­றுத்தல் இருந்­ததால் அது தொடர்பில் யாரி­டமும் வாய் திறக்­க­வில்லை எனவும் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஏற்­பட்ட பாது­காப்­பான சூழலால் அது தொடர்பில் சாட்­சி­ய­ளிக்க தீர்­மா­னித்­த­தா­கவும் தனது சாட்­சி­யத்தின் போது அவர் குறிப்­பிட்டார்.
தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது மெய்­பா­து­கா­வ­ல­ராக இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் லக்ஷ்மன் ஆகி­யோரை படு­கொலை செய்த விவ­காரம் தொடர்­பி­லான சாட்சி விசா­ர­ணைகள் நேற்று கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­ல­கவின் நேரடி கண்­கா­ணிப்பில் சிறப்பு ஜூரிகள் முன்­னி­லையில் ஆரம்­ப­மா­னது. முத­லா­வது சாட்­சி­யா­ள­ரான அரச சாட்­சி­யாக மாற்­றப்­பட்ட பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரித்­தி­விராஜ் மனம்­பேரி முத­லா­வது சாட்­சி­யாக நேற்றும் இரண்­டா­வது நாளா­கவும் சாட்­சி­ய­ம­ளிக்க ஆரம்­பித்தார்.
பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் ரொஹந்­தவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு அவர் நேற்று வழங்கிய­ சாட்­சியம் வரு­மாறு:
கேள்வி- அங்கு யாரை சந்­தித்­தீர்கள் ?
பதில்- பொரளை கனத்­தை­யி­டத்தில் சாமியை சந்­தித்தேன்.
கேள்வி- அவரை தனி­யா­கவா சந்த்­தீர்கள் ?
பதில்-ஆம் தொலை­பேசி வாயி­லாக அழைப்பு கொடுத்­து­விட்டு சாமியும் மேலும் மூவரும் வருகை தந்­தனர்.
கேள்­வி-­அ­வர்கள் எத­னூ­டாக நீங்கள் இருக்­கின்ற இடத்தை வந்­ந­த­டைந்­ந­தனர்?
பதில்-­இ­ரண்டு முச்­சக்­கர வண்­டி­களில் வருகை தந்­தனர் அவற்றில் ஒன்று கறுப்பு நிற­மா­னது மற்­றை­யது க்ரீம் நித்­தி­லா­னது.
கேள்வி- சாமி எந்த வாக­னத்தில் வருகை தந்தார்?
பதில்- கறுப்பு நிற வாக­னத்தில்.
கேள்­வி-­அ­வ­ருடன் எத்­தனை பேர் வருகை தந்­தனர்?
பதில்- நான்கு பேர் வந்­தனர்.
கேள்வி- அவர்கள் யாவர்?
பதில்- சாமி ,சரண்,சானுக, உசேன் என்ற நால்­வரும் வருகை தந்­தனர்.
கேள்வி- உசேன் என்­ப­வைர எவ்­வாறு ? எங்கு வைத்து அறிந்­து­கொண்டீர்? எத்­தனை நாட்­க­ளாக அவரை அறிவீர்?
பதில்- மூன்று மாதங்கள் அறிவேன் பொலிஸ் திணைக்­க­ளத்தில் கட­மை­யாற்­றிய போது அறிவேன்.
கேள்வி- அவர் எங்கு தொழில் செய்தார்?
பதில்- கருணா அம்­மா­னி­டத்தில் தொழில் புரிந்தார்.
கேள்வி- நீங்கள் குறிப்­பிட்ட மூவரும் இங்கு உள்­ள­னரா? அவர்­கைள அடை­யாளம் காட்­டுங்கள்?
பதில்- ஆம் அறிவேன் என்­றதன் பின்னர் மூவ­ரையும் அடை­யாளம் காட்­டினார்.
கேள்வி- உங்­களை சந்­தித்த சாமி என்ன கூறினார்?
பதில்- என்னை நாரா­ஹேன்­பிட்டி மாதா வீதிக்கு செல்­லு­மாறு கூறினார்.
கேள்வி- அவரை சந்­திக்­கின்ற போது உங்கள் கையில் என்ன இருந்­தது?
பதில்- எனது கைகளில் இரண்டு ஹெல்­மட்­டுக்கள் இருந்­தன.ஒன்றை அணிந்­தி­ருந்தேன் மற்­றை­யது கையி­லி­ருந்­தது.
கேள்வி- உங்­களை நோக்கி வந்த சாமி என்­ப­வரின் கைகளில் என்ன இருந்­தது?
பதில்- கறுப்பு நிற பை ஒன்­றுடன் வந்தார், ஆனால் குறித்த பை சென­வி­ரத்­ன­வி­டத்­தி­லேயே இருந்­தது. (குறித்த பையினை பிடித்­தி­ருந்த வித்­தி­னையும் செய்து காண்­பித்தார்)
கேள்வி- அந்த பையின் அளவை அண்­ண­ள­வாக கூறுங்கள்?
பதில்- குறித்த பை இரண்டு அடி நீள­மா­ன­தாக இருக்கும். (நீளம், மற்றும் அகலம் அளந்து பார்க்­கப்­பட்­டது)
கேள்வி- பை தொடர்பில் வேறு என்ன அறி­வீர்கள்?
பதில்- வேறு எதுவும் கூறு­வ­தற்­கில்லை.
கேள்வி- அதன் பின்னர் என்ன நடந்­தது?
பதில்- என்னை மாதா வீதிக்கு செல்­லும்­படி சாதி தொலை­பேசி வாயி­லாக குறிப்­பிட்டார்.
கேள்வி- அங்கு சென்­றபின் என்ன நடந்­தது?
பதில்- மாதா வீதியில் குறித்த இடம்­மொன்­றினை கூறி தாக்­குதல் நடத்­தப்­பட்ட இத்­திற்கு 50 மீற்றர் தூரத்­திற்கு முன்­பாக என்னை நிற்­கு­மாறு தொலை­பேசி வாயி­லாக குறிப்­பிட்டார்.
கேள்வி- நீங்கள் அவ்­விடம் சென்­றதன் பின்னர் என்ன ஆனது?
பதில்- சாமி கூறி­யது போன்று மாதா வீதியில் குறித்த இடத்தில் நாரே­ஹேன்­பிட்டி திசையில் பேமன்ட் ஒன்றிண் மீது நான் பய­ணித்த பல்ஸர் ரக மோட்டார் வாக­னத்­தினை தரித்­தி­ருந்தேன்.
கேள்வி- அங்­கி­ருந்து உங்கள் அவ­தானம் எந்த பக்­கத்தை நோக்­கி­ய­தாக இருந்­தது?
பதில்- நாரா­ஹேன்­பிட்டி திசையை நோக்­கி­ய­தாக இருந்­தது.
கேள்வி- பின்னர் எந்த திசையில் பார்த்­தீர்கள்?
பதில்- பின்­பக்க திசையில் பார்தேன்.
கேள்வி- அங்கு என்ன நடந்­தது?
பதில்- கறுப்பு நிற ஜீப் வண்­டி­யொன்றில் வந்­தி­றங்­கிய சென­வி­ரத்ன எனக்கு முன்னால் சற்று தூரத்தில் நின்­று­கொண்­டி­ருந்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் சிவப்பு நிற ஜீப் ஒன்று என்னை கடந்து சென்­றது அப்­போது சென­வி­ரத்ன அந்த ஜீப் மீது துப்­பாக்­கி­சூடு நடத்­தினார்.
கேள்வி- பி்ன்னர் என்ன நடந்­தது?
பதில்- சென­வி­ரத்ன சிவப்பு நிற ஜீப் மீது துப்­பாக்­கி­சூடு நடத்­தினார்.
கேள்வி- குறித்த வாக­னத்தில் இருந்­தவர் யார் என அறிய முடிந்தா?
பதில்- இல்லை என்னால் அறி­ய­மு­டி­ய­வில்லை, சென­வி­ரத்­ன­வி­டத்தில் கேட்­ட­போது உனக்கு அவ­சி­ய­மற்ற காரணம் வாக­னத்தை நான் குறிப்­பிடும் இத்­திற்கு செலுத்திச் செல் என்றார்.
கேள்வி- தாக்­குதல் நடத்ப்­பட்ட போது எந்த ரக துப்­பாக்கி பயன்­ப­டு்த்­தப்­பட்­டுள்­ளது என்­பதை அறிந்­தீர்­களா?
பதில்- ரீ 56 ரக துப்­பாக்கி என சத்­தினை கொண்டு அறிந்­து­கொள்ள முடிந்­தது, குறித்த துப்­பாக்கி இரு­வ­கைப்­படும் ஒரு வகை­யி­லான ரீ 56 துப்­பாக்­கியில் அனைத்து தோட்­டக்­க­ளையும் ஒரு­மிக்கச் செலுத்த முடியும் மற்­றை­யதில் ஒவ்­வொன்றாய் செலுத்த முடியும் அதனில் முதல் கூறி­யது போன்று அனைத்து தோட்­டக்­க­ளையும் தொடர்ச்­சி­யாக ஒரே முறையில் வெளிப்­ப­டுத்தும் துப்­பாக்­கியே இந்தச் சம்­ப­வத்­திற்கு பாவிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை அறிந்தேன்.
கேள்வி- ரீ 56 ரக துப்­பாக்­கியை நீர் பயன்­ப­டுத்­தி­யுள்­ளீரா? அறிந்­தா­வது உள்­ளீரா?
பதில்- ஆம் யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை ஆகிய பகு­தி­களில் தொழில் செய்த போது அறிந்­தி­ருந்தேன்.
கேள்வி- குறித்த சம்­ப­வத்தில் துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­படும் போது சிறி­த­ள­வேனும் அந்த துப்­பாக்­கியின் வகை என்­ன­வென அனு­மா­னிக்கும் அள­விற்கு உங்­க­ளுக்கு விளங்­கி­யதா?
பதில்- இல்லை அது சிறி­த­ள­விலும் எனக்கு தெரி­ய­வில்லை.
கேள்வி- துப்­பாக்கி பிர­யோகம் யார் மீது நடத்­தப்­பட்­டது என்று நீங்கள் மற்­ற­வர்­க­ளி­டத்தில் கேட்டு அறி­ய­வில்­லையா?
பதில்-­செ­ன­வி­ரத்ன துப்­பாக்கிச் சூட்­டினை நடத்­தி­விட்டு எனது மோட்டார் சைக்கில் வந்து அமர்ந்த போது அவ­ரி­டத்தில் கேட்டேன் ஆனால் அவரோ அது உனக்கு அவ­சி­ய­மற்ற விடயம் வாக­னத்தை நான் கூறும் இடத்­திற்கு செலுத்திச் செல் என்றார்.
கேள்வி- அவர் வாக­னத்­தினை எங்கு செலுத்தச் சொன்னார்?
பதில்- கங்­கா­ரா­மயில் உள்ள கடற்­படை புல­ணாய்வு முகா­மிற்கு அழைத்துச் செல்லும் படியும் நார­ஹேன்­பிட்டி டொரின்டன் ஊடாக அங்கு செல்­லு­மாறு கூறினார்.
கேள்வி- அங்கு சென்­றதன் பின்னர் என்ன நடந்­தது?
பதில்- கங்­கா­ரா­மைக்கு சென்று சென­வி­ரத்­னவை அவ்­வி­டத்தில் விட்­டு­விட்டு நான் அலரி மாளி­கைக்கு பாது­காப்பு பணி­களின் நிமித்தம் சென்றேன்,அன்­றய தினமே சென்­று­விட்டேன்.
கேள்வி- நீங்கள் அலரி மாளி­கைக்கு சென்­ற­டைந்த நேரத்­தினை குறிப்­பி­டுங்கள்?
பதில்-10:45
கேள்வி- இந்த துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கா­னவர் யார் என்­பதை நீங்கள் முன்­பா­கவே அறித்­தி­ருந்­தீர்­களா?
பதில்- இல்லை நான் அறிந்­தி­ருக்­க­வில்லை ஆனால் அலரி மாளி­கைக்கு வந்து உயர் அதி­காரி ஒரு­வரை ஏற்றிச் செல்ல வாக­னத்தில் ஏறி வானொ­லியை இயக்­கிய போது மதியச் செய்தி அறிக்­கையில் பாரா­ளுமன் உறுப்­பினர் ரவிராஜ் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக கூறினர், அப்­போது தான் நான் இது­கு­றிந்து அறிந்தேன்.
கேள்வி- இதற்கு முன்னர் ரவிராஜ் தொடர்பில் அறி­வீர்­களா அவ­ருடன் தொடர்­புள்­ளதா?
பதில்- இல்லை.
கேள்வி- அவர் பாரா­ளு­மன்­றத்தில் எந்த கட்­சியை பிர­தி­நி­தி­து­வப்­ப­டுத்­து­கின்றார்?
பதில்- ரீ.என்.ஏ ( தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு)
கேள்வி- அவரின் பேச்­சுக்­களை கேட்­டுள்­ளீர்­களா? எந்த மொழியில் கேட்­டுள்­ளீர்கள்?
பதில்- ஆம் சிங்­கள மொழியில் அவர் பேச்­சுக்­களை கேட்­டுள்ளேன்.
கேள்வி- அவ­ருடன் சிக்கல் ஏதேனும் இருந்­ததா?
பதில்- இல்லை பிரச்­சி­னைகள் எவையும் இல்லை.
கேள்வி- சம்­ப­வத்தின் பின்னர் நீங்கள் கங்­கா­ரா­மைக்குச் செல்­ல­வில்­லையா?
பதில்- அடுத்த நாள் சென்றேன்.
கேள்வி- அங்கு யாரெல்லாம் இருந்­தார்கள்?
பதில்- சென­வி­ரத்ன, வஜீர ஆகியோர் இருந்­தனர்.
கேள்வி- அதன் பின்னர் யாரு­டனும் பேசி­னீர்­களா?
பதில்- ஆம்.
கேள்வி- அங்கு என்ன நடந்­தது?
பதில்- நாங்கள் முதல் நாள் பய­ணித்த மோட்டர் சைக்கில் துண்­டாக வெட்­டி­யெ­டுக்­கப்­பட்­டது, கிறைண்டர் இயந்­தி­ரனால் வெட்­டப்­பட்­டது.
கேள்வி- நீங்கள் எதற்­காக அன்று மோட்டார் சைக்­கிளை பயன்­ப­டுத்­தி­னீர்கள்? கங்­கா­ரா­மையில் வைத்து வெட்­ட­ப­ட­பட்­டது உங்கள் மோட்டார் சைக்கிள் தான் என்று எவ்­வாறு உறு­தி­யாக அறிந்­தீர்கள்?
பதில்- பாது­காப்பு கட­மை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தினேன். குறித்த மோட்டர் சைக்­கிளில் போலி இலக்­கத்­த­கடு பொருத்­தப்­பட்­டி­ருந்து. அதனை கொண்டு அது நான் செலுத்தி மோட்டார் வண்டி என அறிந்தேன்.
கேள்வி- மோட்டார் சைக்­கிளின் இலக்­கத்­த­கடு போலி­யா­னது என எவ்­வாறு அறிந்தீர்?
பதில்- அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் இலக்­கத்­தட்­டினை பார்க்­கிலும் இது சிறி­ய­தாக இருந்­தது, அதன் எழுத்­துக்­களும் தடிப்பம் குறை­வாக இருந்­தது.
கேள்வி- பி்ன்னர் இந்த சம்­பவம் தொடர்பில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் ஒரு நிறு­வ­னத்­திற்கு அறி­வித்­தீர்­களா?
பதில்- இல்லை.
கேள்­வி-­நீங்கள் இவ்­வ­ளவு நாட்கள் மெள­ன­மாக இருந்­ததன் நோக்கம் என்ன?
பதில்- நோக்கம் என்று எதுவும் இல்லை. உண்­மையை கூறினால் கருணா தரப்­பி­னரால் அச்­சு­றுத்தல் ஏற்­படும் என்ற அச்­சத்­தி­லேயே உண்­மையை கூற­வில்லை.
கேள்வி- அதன் பின்னர் எப்­போது இது தொடர்பில் நீங்கள் குற்­றப்­பி­ரி­வுக்கு தெரி­வித்­தீர்கள்?
பதில்- நான் தெரி­விக்­க­வில்லை, மாறான நான் கொட்­டஞ்­சே­னையில் எனது தங்­கையின் வீட்டிற் தங்­கி­யி­ருந்த போது பொலிஸார் என்னை வந்து விசா­ரித்­தனர்.
கேள்வி- உங்கள் மீது வேறு ஏதும் குற்­றச்­சாட்­டுக்­களில் வழங்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளதா?
பதில்- ஆம் எட்டு வழக்­குகள் தொடுக்­கப்­பட்­டுள்­ளன, அவற்றில் ஒன்று முற்­று­பொற்­று­விட்­டது மற்­ற­ய­வைக்கு தீர்ப்­புகள் இன்றும் கிடைக்­க­ளில்லை.
கேள்வி- இந்த விவ­கா­ரத்தில் உங்­களை தொடர்பு கொண்ட சாமி தொடர்பில் நீங்கள் அறி­வீர்­களா?
பதில்- சாமி என்­பவர் 5 அடி உயரம் இருப்பார் அவரின் வலது கையிலர் பச்சை குத்­தி­யி­ருப்பார்
கேள்வி- பச்சை எவ்­வா­றாக இருக்கும்?
பதில்-­மி­ருக அடை­யாளம் உள்­ளது,
கேள்வி- சரண் தொடர்பில் கூறுங்கள்?
பதில்- அவரும் 5 அடி உய­ர­மி­ருப்பார் அவரின் வலது கையிலும் பச்சை குத்­தி­யி­ருப்பார் மொட்டை அடித்­தி­ருப்பார்,
கேள்வி- சம்­ப­வத்தின் பின்னர் சரணை கண்­டீர்­களா? தொலை­பே­சி­யிலும் தொடர்பில் வர­வில்­லையா?
பதில்- இல்லை அவரை தொடர்பு கொள்­ள­வில்லை தொலை­பே­சி­யிலும் கொள்­ள­வில்லை,
கேள்வி- அவர் இருக்கும் இடத்­தினை அறிந்­தீர்­களா?னை அறிந்தீர்களா?
பதில்- இல்லை அறியவில்லை
கேள்வி- குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது செனவிரத்ன இறங்கிய இதடத்தில் வைத்தே துப்பாக்கிச்சூட்டினை நடத்தினார?
பதில்- இல்லை சற்று தூரத்திலிருந்தே நடத்தினார்,
கேள்வி- இவ்வாறு 9 வருடங்கள் ஏன் உண்மையை மறைத்தீர்கள்? தற்போது சொல்வதற்கு எவ்வாறு துணிச்சல் வந்தது?
பதில்- கருணா தரப்பினர் மீதான அச்சமே காரணம் ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பின்னரேயே உண்மையை கூறும் அளவிற்கு துணிச்சல் வந்நது,
அதனையடுத்து இந்த வழக்கின் குறுக்கு விசாரணைகள் இடம்பெற்ற போது வழக்கறிஞர் ரசிக பாலசூரிய வினவிய கேள்வி ஒன்றின் போது வாக்குமூலம் அளித்த திகதி தொடர்பில் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக குறித்த வாக்குமூலம் தொடர்பில் தகவல்களை திரட்டி மன்றில் சமர்பிக்குமாறு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டதன் பின்னர் வழக்கினை இன்றய தினத்திற்கு ஒத்திவைத்தார். -(3)