செய்திகள்

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் எனக்கும் பிரச்சினை உண்டு : ராஜித

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் தனக்கும் பிரச்சினை உண்டு என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற் 2017ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு விடயத்தில் பிரச்சினைகள் உண்டு. ரவிராஜ் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார். அவரது மெய்க்காவலர்களும் தாமாகவே சுட்டுக்கொண்டனர் என்ற நிலைப்பாட்டையே இந்த தீர்ப்பின் மூலம் காணப்படுவதாகவே அமைச்சர் கூறினார்.
சட்டமா அதிபர் தற்பொழுது இதுதொடர்பில் மேன்முறையீட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார் என்றும் தெரிவித்தார். -(3)