செய்திகள்
ராஜபக்ஷக்களின் திருட்டுகளே நாட்டின் நிதி நெருக்கடிக்கு காரணம் : சந்திரிக்கா
மஹிந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட திருட்டுகளே தற்போதைய அரசாங்கம் நிதி நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்ட காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் மகளிர் அணியின் மகளிர் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் போதும் பாரிய திருட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வேலைத் திட்டங்களுக்கும் உண்மையான செலவைவிட இரண்டரை பங்கு அதிகமாக செலவை காட்டி ஒன்றரை பங்கு பணத்தை பொக்கட்டுகளுக்குள் போட்டுக்கொண்டனர்.
இதேபோல் வெளிநாடுகளினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் போது பெருமளவு தரகு பணம் அறவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆட்சியில் என்ன காரணத்திற்கு என்று தெரியாமல் பெருமளவு கடன் பெறப்பட்டுள்ளது. அது இப்போதே தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் அந்த கடன் சுமையில் நிதி நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
n10




