செய்திகள்

ராஜபக்‌ஷக்காளால் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை அமெரிக்காவின் உதவியுடன் நாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் முயற்சி

வெளிநாட்டு வங்கிகளில் மஹிந்த குடும்பத்தினாரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை  நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக டுபாய் மற்றும் சுவிஸ் வங்கிகளில் பெருந்தொகை பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது தொடர்பான தகவல்களை அந்த நாடுகள் வழங்க இணக்கம் தெரிவிக்கவில்லையெனவும் இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தங்களினூடாக அந்த பணத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கையெடுத்துள்ளதாக சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
n10