செய்திகள்

ரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரையில் விளக்க மறியல்

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 6 நாட்களாக கைது செய்வதற்காக தேடப்பட்டு வந்த நிலையில் தெஹிவளை பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்பின்னர் சற்று முன்னர் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். -(3)