செய்திகள்

ரிஷாத் தலைமறைவாக இருக்க உதவிய 7 பேர் கைது!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சிக்காது தலைமறைவாக இருப்பதற்கு அவருக்கு உதவி வழங்கிய வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பகுதியில் இரண்டு வீடுகளில் இவர் தங்கிருந்துள்ளதாகவும் இதன்படி இவருக்கு தங்குமிடம் வழங்கியவர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்று காலை ரிஷாத் பதியுதீன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். -(3)