செய்திகள்

ருஹுனு தேசிய கல்வியியற் கல்லூரியில் மோதல்: மாணவர்கள் சிலர் காயம்!

ருஹுனு தேசிய கல்வியியற் கல்லூரியில் நேற்று இரவு ஏற்பட்ட  மோதலில் மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.

கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று தற்போது பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக கடமையாற்றும் மாணவர்கள் குழுவொன்று கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு (26) சிரேஷ்ட மாணவர்கள் குழு விருந்து நடத்தியதாகவும், பின்னர் அவர்களில் 50 பேர் கொண்ட குழுவொன்று கல்வியியற் கல்லூரி வளாகத்திற்கு வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த 12 மாணவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பீடாதிபதி செய்த முறைப்பாடு தொடர்பில் அக்மீமன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

-(3)