செய்திகள்

ரூ.2 கோடி கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி

சில நாட்களுக்கு முன்பு முக கிரீம் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது. ஆனால் அதில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார். நான் அழகு கிரீம் எதையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை மூலம் கிடைக்கும் மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

அதனால் பயன்படுத்தாத பொருட்களுக்காக நான் விளம்பர படத்தில் நடிக்க மாட்டேன் என அந்த வாய்ப்பை நிராகரித்தார். இந்நிலையில் இப்போது குளிர்பான விளம்பரம் ஒன்றுக்காகவும் சாய்பல்லவிடம் பேசியுள்ளனர். அந்த வாய்ப்பையும் மறுத்திருக்கிறார் சாய் பல்லவி.7c591596e00814db993dbec6ad9d44d1

‘எப்போதுமே இயற்கைதான் நிஜ அழகு. இயற்கை மூலம்தான் எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறவள் நான். அப்படி இருக்கும்போது கெமிக்கல் நிறுவனங்களுக்கு ஆதரவாக மனசாட்சியை விற்றுவிட்டு செயல்பட முடியாது. எத்தனை கோடி கொடுத்தாலும் சரியே’ என அதிரடியாக அறிவித்திருக்கிறார் சாய் பல்லவி.(15)