லக்கல பொலிஸ் நிலையத்தில் அதிகாலை அதிரடித் தாக்குதல்: ஆயுதங்கள் பல சூறையாடல்
லக்கல பொலிஸ் நிலையத்துக்குள் இன்று வியாழக்கிழமை அதிகாலை அத்துமீறிப் பிரவேசித்த குழு ஒன்று அங்கிருந்து பல ஆயுதங்களைக் கைப்பற்றிச் சென்றிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட ஆயுதங்களல் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் ஐந்து பிஸ்டல்களும் உள்ளடங்கியிருப்பதாகத்தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்தில் காணப்பட்ட திறப்புக்களைப் பயன்படுத்தி ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகம் திறக்கப்பட்டே இந்தக் கொள்ளை இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது நான்கு பொலிஸார் மட்டுமே கடமையில் இருந்துள்ளார்கள்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விஷேட பொலிஸ் குழு ஒன்று சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
R-06




