செய்திகள்

லசந்த கொலை விவகாரம் : பொன்சேகாவிடம் இன்றும் விசாரணை

சண்டே லீடர் பத்திரிகை முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக முன்னாள் இராணுவ தளபதியான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த சமயத்தில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தப் படுகொலையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இந் நிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணிநேரம் விசாரணைகளை நடாத்தியிருந்தனர்.
இதன்போது மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோதாபய ஆகியோருக்கு இதனுடன் தொடர்பு இருப்பதாக தான் உறிய விடயங்களை முன்வைத்திருந்ததாக பொன்சேகா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)