லண்டனில் அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கும் அபூர்வ ராகங்கள் மற்றும் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி: பெயர்களை பதிவுசெய்ய கோரிக்கை
தாயகத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டுவரும் Concern Sri Lanka அமைப்பு தனது பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் விரிவுபடுத்துவதற்குமாக அபூர்வ ராகங்கள் மற்றும் பாட்டுக்கு பாட்டு” என்ற நிதி சேகரிப்பு நிகழ்ச்சி ஒன்றை லண்டனில் ஏற்பாடு செய்திருக்கிறது.
எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற இடத்தில் நடைபெறும் இந்த நிகழ்வினை பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் தொகுத்து வழங்குகிறார். இந்த இணையற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் நாட்டில் இருந்து பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் விக்கம் விஜயலக்ஷ்மி ஆகியோர் வருகை தருகிறார்கள். இந்த நிகழ்வுக்கு ஜீவராஜ் சுருதி இசைக்குழு இசை அமைக்கிறது.
மேலதிக தகவல்களுக்கு: 07534 284 858, http://www.concernsrilanka.com/apoorva-raagangal
இந்த நிகழ்வில் பங்குகொள்ள விரும்புவோர் தமது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கங்களை கீழே பதிவிடலாம்.




