செய்திகள்

லண்டனில் நடைபெறும் சிறிசேனவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன் கிழமை லண்டனுக்கு விஜயம் செய்திருக்கும் நிலையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்றுவரும் பல்வேறு வடிவங்களிலுமான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பிரித்தானிய தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

Marlborough House பகுதியில் Commonwealth Secretariat முன்பாக காலை முதல் நடைபெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்டம் மாலை 6.30 மணி வரை நடைபெறும்.

பொது நலவாய நாடுகளின் ஊழலுக்கு எதிரான மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளவே அவர் லண்டன் சென்றுளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருக்கிறது.

Protest against Maithri in London 1 Protest against Maithri in London 2 Protest against Maithri in London 4 Protest against Maithri in London 5 Protest against Maithri in London 6 Protest against Maithri in London 8