செய்திகள்

லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் மாணவர்களுக்கான பொருட்கள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நாளை  செவ்வாய்கிழமை லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் யாழ்.மாவட்ட விழிப்புலணற்றோர் மற்றும் சங்கானை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பொருட்கள் அன்பளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்து.
மேற்படி நிகழ்வில் யாழ் விழிப்புலணற்றோர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கும் என 200 பயனாளிகளுக்கு பாடசாலை புத்தகபைகள் நுளம்பு வலைகள் மற்றும் விழிப்புலணற்றோரின் இசைக்குழுவுக்கு அவர்களின் வேண்டுகோளுக்கினங்க 32 Chanel sound mixer,5000 w  என்பனவற்றுடன் சங்கானை கோட்ட பாடசாலை மாணவர்கள் 130 பேருக்கு பாடசாலை புத்தகபைகள் கொப்பிகள் என பல லட்சம் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பாக வழங்கபடவுள்ளதுடன் பிரபல தொழில் அதிபர் இ.ச.பே.நாகரத்தினம் அவர்களின் சமூகசேவையை கௌரவிக்கும்முகமாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் சமூக நல ஜோதி எனும் சிறப்பு பட்டமும் வழங்கபடவுள்ளது.
இன் நிகழ்வில் லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தின் சுவாமி மற்றும் லண்டன் அறக்கட்டளை நிதிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
n10