லவ் லெட்டர் வருதா? கீர்த்தி வெட்கம்!
ரஜினி முருகன்’ படத்தின் அபார வெற்றி கீர்த்தி சுரேஷை தமிழகத்தின் பட்டி தொட்டிக்கெல்லாம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. முதலில் வெளிவந்த ‘இது என்ன மாயம்’ போதிய கவனம் பெறாததால் சோர்வாக இருந்தவர், இப்போது உற்சாகமாக வளைய வருகிறார்.
அவருடன் நடந்த உரையாடல் பேட்டி பின்வருமாறு……………
“எப்படி ஃபீல் பண்ணுறீங்க?”
“இதென்ன கேள்வி! ரொம்பவே ஹேப்பியா இருக்கேன். ‘ரஜினி முருகன்’ நடிச்சிக்கிட்டிருக்கப்பவே நிறைய பேர் இந்த படம் சூப்பர்ஹிட் ஆகும்னு சொன்னாங்க. நாம ஒர்க் பண்ணுற எல்லா படமுமே ஹிட் ஆகணும்னு நினைச்சிதான் வேலை பார்க்குறோம். ‘ரஜினி முருகன்’ படத்தில் கிடைச்ச வெற்றியை தக்க வெச்சுக்கணுங்கிற பெரிய பொறுப்பு இப்போ வந்திருக்கு. ரொம்ப கவனமா இருக்கேன்!”
“முதல் படம் சரியா போகலைன்னதும் கீர்த்தி ராசியில்லாத பொண்ணுன்னு இண்டஸ்ட்ரியில் ஒரு பேச்சு ஓடிச்சே?”
“சினிமாவில் மட்டுமல்ல. எந்தத் துறையிலுமே வெற்றி ரொம்ப முக்கியம். ஒரு ஹீரோயின் கையிலா ஒரு படத்தோட வெற்றி, தோல்வி இருக்கு? சினிமா என்பது கூட்டுமுயற்சி. அத்தனை பேரோட பங்களிப்பும் சரியா இருந்தாதான் ஒரு படம் வெற்றியடையும். வெற்றிக்கோ, தோல்விக்கோ யாரோ ஒருத்தர் மீது பழியைப் போட்டுட்டு மற்றவர்கள் எஸ்கேப் ஆகக்கூடாது. அதென்னன்னு தெரியலை இந்த ராசி சென்டிமென்டாலே நடிகைகள் மட்டும்தான் சினிமாவில் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. இந்த நிலைமை மாறணும்.”
“ரசிகர்கள் லவ் லெட்டர் போடுறாங்களா?”
“அப்படின்னு சொல்ல முடியாது. கடிதங்களிலும் சரி, நேரில் பார்க்குறப்பவும் சரி, ரொம்ப கண்ணியமாதான் நடந்துக்கறாங்க. பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி ரொம்ப எளிமையா இருக்குறீங்கன்னு பாராட்டுறாங்க. என் அம்மா மேனகாவும் பெரிய நடிகை என்பதால், அவரோட அனுபவம் எனக்கு சினிமாவில் நல்ல முறையில் பயணிக்க வழிகாட்டலா இருக்கு.”
“உங்க வாய்ஸ் நல்லா இருக்கு!”
“தேங்க்ஸ். நல்லா தமிழ் பேசுவேன். சரளமா வாசிப்பேன். நான் நடிக்கிற படங்களுக்கு நானேதான் டப்பிங்கும் பேசறேன்.”
“என்னென்ன படங்கள் நடிக்கிறீங்க?”
“பாபிசிம்ஹாவோடு ‘பாம்பு சட்டை’, பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒரு படம். அப்புறம் மீண்டும் சிவகார்த்திகேயனோடு ஒரு படம். பரதன் இயக்குகிற படத்தில் விஜய்யோடு நான் நடிக்கிறதா பத்திரிகைகளில் எழுதறாங்க. அதுபத்தி எனக்கே தெரியாது. ஆனா அப்படியா இருந்தா அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறென்ன இருக்கு!”
“நீங்க நடிக்கிற படங்களை எப்படி செலக்ட் பண்ணுறீங்க?”
“கதை பிடிக்கணும். அதோட கூட யார் யார் வேலை பார்க்கிறாங்கங்கிறதும் முக்கியம்.”
“சம்பளத்தை ஏத்திட்டீங்களாமே?”
“ஹிட் நடிகைகள் அத்தனை பேர் மீதும் வழக்கமா சொல்லப்படுற குற்றச்சாட்டுதான். உண்மை என்னன்னு என்னை வெச்சி படம் எடுக்குறவங்களுக்கு தெரியும்.”
“யாரோடு ஜோடி சேர ஆசை?”
“இதென்ன கேள்வி! அஜீத்தோடுதான்!”




