செய்திகள்

லேடி சூப்பர் ஸ்டார் திரிஷாவா?

நடிகை நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் ராணியாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் இவர் அதிகமான படங்களில் நடித்துவருகிறார்.

லேடி டான், லேடி குயின், லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடிவந்தனர். கடந்த 2015 ம் ஆண்டின் நம்பர் 1 நடிகையாக இருந்தார். அந்த பட்டியலில் திரிஷாவும் இருந்தார்.

நயன்தாராவின் போட்டி நடிகையாக பேசப்பட்டாலும், இருவரும் நல்ல நண்பர்களே. இப்போது திரிஷா சினிமாவிற்கு வந்து 14 வருடங்கள் கடந்ததையொட்டி பலரும் வாழ்த்திவருகிறார்கள்.

தற்போது திரிஷா ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடிவருகின்றனர். இதனால் ரசிகர்களிடையே போட்டி வந்துள்ளது.

N5