செய்திகள்

லொத்தர் டிக்கட் விற்பனை பிரதி நிதிகள் தொடர் போராட்டத்தில்

லொத்தர் டிக்கட் விற்பனையிலிருந்து விலகி தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் லொத்தர் டிக்கற் விற்பனை பிரதிநிதிகள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இன்று பிற்பகல் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
லொத்தர் டிக்கட்டுகளின் விலைகளை 10 ரூபாவினால் அதிகரித்தல் மற்றும் வரி அதிகரிப்பு தீர்மானத்திற்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)