லொத்தர் டிக்கட் விலைகளும் அதிகரிக்கப்பட்டன : விற்பனையாளர்கள் போர்க் கொடி
லொத்தர் டிக்கட்களின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இதுவரை காலம் 20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட லொத்தர் டிக்கட்களின் விலைகள் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு கூடுதலான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே லொத்தர்; டிக்கட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லொத்தர் டிக்கட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களும், முகவர்களும் டிக்கட் விற்பனையை நிறுத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். வீதிகளில் தற்போது 03 லட்சம் பேர் லொத்தர் டிக்கட்டுக்களை விற்பனை செய்கின்றனர். இதில் வலது குறைந்தவர்களும் அடங்குவர்.
டிக்கட் விலை அதிகரித்தால் விற்பனையை நிறுத்துவதென டிக்கட் விற்பனையாளர்கள் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தனர். தற்போதைய விலையான 20 ரூபாவுக்கும் டிக்கட்டை விற்பனை செய்ய கஷ்டமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)




