செய்திகள்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை சூறாவளியாக வலுவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த தாழமுக்க நிலை நாளைய தினம் இந்திய கடல் பிராந்தியங்களில் மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.(15)