‘வடகொரிய படைத்தளபதிக்கு மரண தண்டனை’
வடகொரிய படைத் தளபதிக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென்கொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜெனரல் றி யொங் ஜில் சொந்த நலனுக்காக ஊழலில் ஈடுபட்டதாக யொன்ஹப் செய்தி நிறுவனம் பெயர் கூறப்படாத ஒருவரை ஆதாரம் காட்டி கூறியுள்ளது.
இந்த அறிக்கையை உறுதி செய்யமுடியவில்லை.
வடகொரிய தலைவர் கிம் யொங் உன்னின் கீழ் 2013இல் ஜெனரல் றி அவர்கள், கொரிய மக்கள் படையின் தலைமை ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
2011இல் கிம் யொங் உன் பதவிக்கு வந்தது முதல் அவரது மாமா உட்பட 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டு தென்கொரியா மதிப்பிட்டிருந்தது.
n10




