செய்திகள்

வடக்கின் நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் அடுத்த முதலமைச்சராக முயற்சியா? இது குறித்து எதுவும் தெரியாது என்கிறார் ‘விக்கி’

அடுத்த வடக்கின் மாகாண சபைத் தேர்தலில் யாழில் நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற அவரது அமைச்சின் கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளரை சந்தித்த போது, அடுத்த மாகாணசபைத் தேர்தலில் வடக்கு முதலமைச்சராக யாழில் உள்ள நீதித்துறையை சேர்ந்த ஒருவரை நியமிக்க சிலர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீங்கள் அறிந்துள்ளீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே இவ்வாறு பதில் அளித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை எனக்கு எவரும் இது தொடர்பாக சொல்லவில்லை. போட்டியிட வேண்டும் என என்னிடமே கேட்டுவருகின்றனர். நான் போட்டியிடுவதா இல்லையா என கடவுளே பார்த்துக்கொள்வார் என கூறியிருக்கின்றேன் என சிரித்தவாறு தெரிவித்தார்.

N5