செய்திகள்

”வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி”: யாழ் மாணவர்களின் பேரணி முல்லைத்தீவை அடைந்தது!

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பல்கலைக்கழக மாணவர்களின் 2வது நாள் பேரணி கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்தது.

இன்று காலை இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பமான பேரணியில் பரந்தன் சந்தியில் மன்னார் மக்கள் இணைந்து கொண்டனர்.

தொடர்ந்து விசுவமடு பகுதியில் பெருமளவான மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுடன் கலந்து ஆதரவளித்தனர்.

தொடர் பேரணியாக சென்ற மக்கள் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் முல்லைத்தீவு நோக்கி பயணம் இடம்பெற்றது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தப் பேரணி ஆரம்பமாகியிருந்தது.

-(3)