வடக்கில் உள்ள 640 கிராமங்களில் 105 மில்லியனுக்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன
பா.ஜதுர்சிகா
நீண்டகாலமாக தொடர்ந்த உள்நாட்டுப்போரின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக வன்னிப்பிரதேசம் காணப்படுகின்றது.
இப்பகுதிகளில் யுத்தகாலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் தற்போதும் மீள்குடியேறிய மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் மக்கள் மீள்குடியேறுவதற்கும் பயிர் செய்கை நிலங்களில் தமது வாழ்வாதார பயிர் செய்கைகளை மேற்கொள்;;வதற்கும் ஏற்ற வகையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டாலும் இன்னும் சில பகுதிகள் வெடிபொருட்களின் ஆபத்துக்குள் காணப்படுகின்றன.
குறிப்பாக வடபகுதியின் மிக ஆபத்தான பகுதியாக கிளாலி தொடக்கம் முகமாலை நாகர்வோவில் வரையான பகுதிகள் மிகவும் வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன.
வடபகுதியில் இடம்பெற்ற உள்நாட்டுப்போரில் இருதரப்புக்களும் தினமும் சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு பகுதியாகவும் யுத்த பிரதேசமாகவும் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள கிளாலி முகமாலை மற்றும் யாழ் வடமராட்சி நாகர்கோவில் ஆகிய பகுதிகள் காணப்பட்டன.
யாழ் குடாநாட்டினையும் வன்னிப்பிரதேசத்தையும் கிணைக்கின்ற கிளாலி முதல் நாகர்கோவில் வரைக்குமான கிட்டத்தட்ட ஏழு கிலோ மீற்றர் வரையான பகுதி ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் எண்ணற்ற மிகவும் பெறுமதி வாய்ந்த உயிர்களை விலையாகக் கொடுத்தன.
அத்துடன் ஏராளமான மாணவர்கள் உடல் அபயங்களை இழந்து இன்னும் அங்கவீனர்களாகவும் உள்ளனர்.
ஆரம்பத்தில் மக்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்களில் அவர்களால் தமது வாழ்வாதாரத் தேவைகளுக்கு வளர்க்கப்பட்ட ஏராளமான வானுயர்ந்த தென்னை பனை மரங்கள் வீடுகள் கட்டடங்கள் அனைத்துமே யுத்த காயங்களை தாங்கி சிதைத்து சின்னாபின்னமாகி காணப்படுகின்றன.
தற்போது இவ்வாறு வெடிபொருட்களின் ஆபத்தான பகுதிகளாக காணப்பட்ட பெருமளவான பகுதிகள் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடிமயர்விற்கு அனுதிக்கப்;பட்டு அவர்களுக்கான இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இருந்தும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை முகமாலை தெற்கு இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி என பல்வேறு பகுதிகள் இன்னும் வெடிபொருட்களின் சவால் நிறைந்த பகுதியாக காணப்படுவதுடன் இப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்த இடங்;களில் மீள்குடியேற முடியாதுள்ளன.
தற்போது இப்பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு 248 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வரையில் தமது பதிவுகளை மேற்கொண்டு விட்டு இதனை அண்டிய பகுதிகளிலும் வெளிமாவட்டங்களிலும் வாடகை வீடுகள் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மிகவும் வெடிபொருட்கள் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்ற பாதுகாப்பற்ற பகுதிக்குள் சென்ற பலர் வெடிபொருட்களில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் உடல் அபயங்களையும் இழந்துள்ளனர்.
கடந்த வாரம் கிளாலிப் பகுதியில் வெடிபொருள் அகற்றப்படாத மிகவும் ஆபத்தான பகுதியென அடையாளப்படுத்தப்பட்ட பகுதிக்குள் சென்ற இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது மிகவும் வெடிபொருள் ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்;பட்ட கிளாலிப்பகுதிக்குள் கடந்த 23ம் திகதி சென்ற எட்டுப்பிள்ளைகளின் தந்தையான கறுப்பையா ராஜா என்பவர் உயிரிழந்துள்ளதுடன் இவருடன் கூடச்சென்ற ஒரு பிள்ளையின் தந்தை படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கிளாலி அறத்திநகரைச் சேர்ந்த இருவரும் குறித்த பகுதியை நன்கறிந்;தவர்கள் என்றும் இந்தப்பகுதிகளில் ஆபத்துக்களை தெரிந்து கொண்டும் இந்த ஆபத்தில் சிக்சி உயிரிழந்தும் காயமடைந்துள்ளமை தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது தமது மாடுகளைப் பார்க்கச் சென்றனர் என்றும் ஒரு சாரார் சட்டவிரோத மீன்பிடிகளை மேற்கொள்வதற்கான வெடிமருந்துகளை எடுப்பதற்கும் என பல்வேறுபட்ட கருத்துக்;கள் சொல்லப்படுகின்றன. எது எவ்வாறு இருப்பினும் பெறுமதி வாய்ந்த மனித உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்த வரையும் காயமடைந்தவரையம் மீட்பதற்கு சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்பட்டது.
அதாவது குறித்த பகுதிகளில் அங்குலம் அங்குலமாக மிக ஆபத்தான முறையில் நீண்டகாலம் காத்திருந்;து வகைதொகையின்றி உயிர்களை பறிக்கக்கூடிய விதத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டன.
இந்த நிலையில் விபத்தில் மீட்பதில்கூட இழப்புக்களை சந்திக்கும் நிலை ஏற்படும்.
இதேபோன்று இதனை அண்மித்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒருவர் வெடிபொருளில் சிக்கி உயிரிழந்த நிலையில் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் உதவியுடன் இவரது சடலம் மீட்க்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அடுக்கடுக்காய் மண் அணைகள் காவலரண் அங்குலம் அங்குலமாய் மிகவும் ஆபத்தான நிலக்கண்ணி வெடிகள் பொறிவெடிகள்வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்கள் புதைக்கப்பட்ட பகுதியாகக் காணப்படும் இப்பகுதிகளில் பொதுமக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட போதும் அவற்றைப் பொருட்படுத்தாது அதற்குள் சென்று விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றன.
நீண்ட பயிற்சிகளைப் பெற்ற நவீன கருவிகளை பயன்படுத்தி வெடிபொருள் அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் வெடிபொருட்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
இவ்வாறான விபத்துக்களை தவித்துக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டபோதும் தற்போது இது தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது.
இதனைவிட கடந்த வாரம் திருமுறிகண்டி பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து கிளைமோர் குண்டுகள் மீட்க்கப்பட்டன. குறித்த கிணறு நிறுவனம் ஒன்றினால் துப்பரவு செய்யப்பட்டு வழங்கப்பட்டபோதும் அது உரிய முறையில் துப்பரவு செய்யப்படாமல் கையளிக்கப்பட்டமை இந்த வெடிபொருள் மீட்கப்பட்டதிலிருந்து தெரியவந்துள்ளது.
வெடிபொருள் ஆபத்துக்கள் என்பது மிகவும் ஆபத்தான ஒன்று இதில் இருந்து ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்பதை கடந்த கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அத்துடன் வெடிபொருள் ஆபத்தான பகுதிகளில் கண்ணிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர்
என்றும் அப்போது யுனிசெப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான வெடிபொருள் ஆபத்துக்களிலிருந்து மிகவும் பெறுமதிவாய்ந்த மனித உயிர்கள் பாதுகாக்கப்படவேண்டும்.




