வடக்கில் காணி பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வை காண முடியாது : ராஜித
வடக்கில் காணி பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது எனவும் அரசாங்கம் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்குமெனவும் அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவு மக்கள் 15 நாட்களுக்கும் மேலாக படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அது தொடர்பாக இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் காணி விடுவிக்கப்படாது இருக்கும் போது இவர்களுக்கு போராட முடியாமல் இருந்தது. ஆனால் இப்போ அப்படியில்லை. எவ்வாறாயினும் ஒரே இரவில் தீர்வை காண முடியாது. அரசாங்கம் ஏற்கனவே பல அளவு காணிகளை விடுவித்துள்ளது. அதன்படி மேலும் விடுவிக்கப்படும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




