வடக்கில் தேர்தலை நடத்த முடியாத சூழலை ஏற்படுத்தவே முயற்சி : ராஜித
பல்வேறு குழுக்களை கொண்டு வடக்கில் அச்ச நிலைமையை ஏற்படுத்தி அங்கு தேர்தல்களை நடத்த முடியாத நிலைமையை ஏற்படுத்தவே ராஜபக்ஷக்கள் முயற்சிப்பதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆவா குழுக்கள் போன்ற குழுக்களை பயன்படுத்தி அங்கு அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி அங்கு தேர்தல்கள் நடத்த முடியாத நிலைமையையேற்படுத்தி அடுத்த தேர்தல்களின் போது தமது வெற்றியை உறுதி செய்துக்கொள்ளும் நோக்கத்திலேயே ராஜபக்ஷக்கள் செயற்படுகின்றனர். இல்லையென்றால் ஏன் அங்கு இவ்வாறு ஆவா குழுக்களின் செயற்பாடுகளை முடுக்கி விட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார் -(3)




