வடக்கில் வளங்கள் அழிக்கப்படுகின்ற அல்லது அபகரிக்கப்படுகின்ற பகுதிகளில் அதற்கேற்ப அபிவிருத்திகள் இல்லை
பா.ஜதுர்சிகா
ஒரு பிரதேசத்தினுடைய இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதற்கு ஏற்ப அந்த பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் எவையும் முன்னெடுக்கப் படுவதழல்லை இவ்வாறு இயற்கை வளங்கள் அழிக்ப்படுவதனால் பல்வேறுபட்ட சூழல் பாதிப்புக்கள் இயற்கை அனர்த்தங்கள் என பல்வேறுபட்ட தாக்கங்கள் ஏற்படுகின்றன.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வினையடுத்து கிளிநொச்சி முல்லைத்;தீவு மாவட்டங்களில் காடழிப்புக்கள் சடடவிரோத மணல் அகழ்வுகள் கல் அகழ்வுகள் கிரவல் அகழ்வுகள் பெறுமதி வாய்ந்த மரங்கள் கடத்தப்படுதல் என்பது வகை தொகையின்றி இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான வளங்கள் அழிக்கப்படுகின்ற அல்லது அபகரிக்கப்படுகின்ற பகுதிகளில் அதற்கேற்ப அபிவிருத்திகள் இல்லை என்றே பலராலும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் பெருமளவான வளங்கள் அனுமதியற்ற முறைகளில் அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் இவை கட்டுப்படுத்தப்படவேண்டும் எனவும் பல்வேறு தரப்புக்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்ற போதும் தொடர்ந்தும் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் மிகவும் வறுமை மிகுந்த மாவட்டமாகவும் பின் தங்கிய மாவட்டமாகவும் காணப்படும் முல்லைத்தீ|வு மாவட்டத்தன் கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 13174 குடும்பங்களும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 12802 குடும்பங்களும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 5890 குடும்பங்களும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 3748 குடும்பங்களும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 2905 குடும்பங்களும் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 3336 குடும்பங்களுமாக சுமார் நாற்பத்தி ஓராயிரத்து 855 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 162 பேர் வாழுகின்ற மிகவும் பின் தங்கிய ஓர் மிகவும் வறுமை மிகுந்த மாவட்டாகவும் காணப்படுகின்றது.
யுத்தத்தினாலும் ஆழிப்பேரலை ஆனர்த்தத்தினாலும் அதன் பின்னரான யுத்தத்தினாலும் பெரும் அழிவுகளையும் இழப்புக்களையும் எதிர்கொண்ட இந்த மாவட்டத்தின் தேவைகள் அதிகளவில் காணப்படுகின்ற போதும் அவற்றின் தேவைகள் பூர்த்தியாவதற்கு இன்னமும் பல ஆண்டு எடுக்கும் என்றே கூறப்படுகின்றது.
இலங்கையில் இவ்வாறு மிகவும் பின்தங்கிய மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளமுடியாத ஒரு பிரதேசமாக மாந்தை கிழக்கு பிரதேசம் காணப்படுகின்றது.
முல்லைத்தீவு நகரில் இருந்து சுமார் 90 கிலோ மீற்றருக்கும் அப்பால் மன்னார் மாவட்டத்தினதும் வவுனியா மாவட்டத்தினதும் எல்லையோரப்பகுதிகளை அண்டிய மிகவும் மிகவும் பின் தங்கிய கிராமங்களை உள்ளடக்கிய ஓர் பிரதேசமாக காணப்படுகின்றது.
அதாவது வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மடத்து விளாங்குளம் நவ்வி ஆகிய பகுதிகளையும் மன்னார் மாவட்டத்தின் வலையன்கட்டு கீரி சுட்டான் கூராய் உள்ளிட்ட பகுதிகளையும் அண்டிய மிகவும் பின் தங்கிய ஓர் பிரதேசமாக மாந்தை கிழக்கு பிரதேசம் காணப்படுகின்றது.
இவ்வாறு பின் தங்கிய பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் தமக்கான எந்தவித அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக மருத்துவ தேவைகள் கல்வி வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெறுவதில் சதா சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அத்துடன் இவற்றை வேறு இடங்களில் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற போக்குவரத்து வசதிகள் கூட இல்லாத நிலை காணப்படுவதுடன் மக்கள் போதுக்குவரத்து செய்யக்கூடிய வகையில் அநேகமான கிராமங்களின் வீதிகள் இல்லை.
அதாவது பதினைந்து கிராம அலுவலர் பிரிவுகளைக்கொண்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் ஓரளவு வீதிகள் போக்குவரத்துக் செய்யக்கூடிய வகையிலும் போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளில் எந்தவித போக்குவரத்து வசதிகளும் இல்லை.
மக்கள் போக்குவரத்துச் செய்யக்கூடிய வீதிகளும் இல்லை.
இவை இவ்வாறிருக்க இங்குள்ள மிகவும் பெறுமதி வாய்ந்த இயற்கை வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்படுகின்றன. அதாவது இந்தப்பகுதிகளில் உள்ள பெறுமதி வாய்ந்த காட்டு மரங்கள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இவை தடுக்கப்படவேண்டும் இப்பகுதிகளில் உள்ள மக்கள் தமக்குத் தேவையான வளங்களைப்பெற்றுக் கொள்ள முடியாத வகையில் தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதும் இவை எவ்வாறு அழிக்கப்படுகின்றன.
அல்லது வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என கடந்த 2010ம் ஆண்டிலிருநது இன்றுவரை பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோரால் மாவட்டமட்ட கலந்துரையாடல்களிலும் சுட்டிக்காட்டப்பட்டபோதும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளனவே தவிர அவை குறைந்தபாடாக இலல.
இவ்வாறான வளங்கள் அழிக்கப்படுதல் மற்றும் பெறுமதி வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் இங்குள்ள வளங்கள் அழிவடையும் அதே நேரம் வீதிகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன.
கடந்த 2009ம் ஆண்டில் மீள் குடியேற்றத்தின் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு போடப்பட்ட சிறாட்டிகுளம் நாட்டாங்கண்டல் வீதி மற்றும் ஒட்டறுத்தகுளம் பாலிநகர் வீதி உள்ளிட்ட பிரதான வீதிகள் பல மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட போதும் இன்று இவ்வீதிகளில் துவிச்சக்கர வண்டிகளில் கூட பயணிக்கமுடியாத நிலையில் சேதமடைந்துள்ளன.
இவ்வீதிகள் சட்டவிரோத மரக்கடத்தல்கள் மணல் கிரவல் அகழ்வுகளில் ஈடுபடும் கனரக வாகனங்களின் போக்குவரத்தினாலேயே இவ்வீதிகள் சேதமடைந்துள்ளன என இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக சிறாட்டிகுளம் நட்டாங்கண்டல் வீதியானது புனரமைக்கப்பட்டு நான்கு வருடங்களுக்குள் அந்த பகுதியில் உள்ள 60 வரையான குடும்பங்களைச் சேர்ந்த இரு நூறு வரையான மக்களும் குறித்த வீதியில் உள்ள நட்டாங்கண்டல் பாடசாலை மாணவர்களும் மாத்திரமே பயன்படுத்துகின்ற இவ் வீதி இவ்வாறு சேதமடைந்துள்ளமை என்பது இங்குள்ள வளங்களின் அபகரிப்புக்கு ஓர் சாட்சியாகவுள்ளன.
எங்களுடைய தேவைக்கு எந்த ஒரு மரங்களையோ அல்லது மணலையோ பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் கிடைத்தன. அவற்றுக்கான மரங்களை பெற்றுக்கொள்ளமுடியாது பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றோம்.
வீட்டுத்திட்ட தேவைக்குரிய மரங்களை வெட்டுவதற்கு அனுமதிகளை கோரும் போது எமது சொந்தக்காணியில் அவ்வாறான மரங்கள் இருந்தால் மாத்திரமே அனுதிகள் வழங்கப்படுகின்றன.
1950ம் ஆண்டு மற்றும் 1960 ம் ஆண்டு 1973 ம் ஆண்டு காணிகள் வழங்கப்பட்டு நாங்கள் வாழும் குறித்த காணிகளில் பனை தென்னை போன்ற பயன்தரு மரங்கள் தவிர பயிர் செய்கை பகுதிகளாகவும் இருப்பதனால் இவ்வாறு வீட்டுத்தேவைக்கான மரங்கள் எங்களது காணிகளில் அரிது ஆயால் எங்களுக்கு பக்கத்திலுள்ள காடுகளில் அல்லது தரிசு நிலங்களாவுள்ள எங்களுடைய காணிகளில் வெட்டமுடியாது. 
ஆனால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போது பகல் வேளைகளிலும் இரவு வேளைகளில் லொறி டிப்பர் என கனரக வாகனங்களில் மிகவும் பெறுமதியான முதிரை பாலை தேக்கு போன்ற பெறுதியான காட்டுமரங்கள் வெளியிடங்களுக்கு மூப்பன் குளம் மூன்று முறிப்பு சிறாட்டிகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன.
அத்துடன் விறகுத் தேவைகளுக்கு பெருமளவான மரங்கள் அழிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.
இவற்றுக்கான அனுமதிகள் உள்ளன என்றும் நான்அவருடைய ஆள் நாள் இவருடைய ஆள் என்று ஒவ்வொரு அமைச்சர்கள் அரசியல் வாதிகளின் பெயர்களை கூறி அவர்களின் அனுமதியுடன் கொண்டு செல்வதாகவும் ஏதோவிதங்களில் பெற்றுக்கொண்ட அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கின்றார்கள் இதைப்பற்றி கதைத்தால் உயிர் அச்சுறுத்தல்கள் இதனால் நாங்கள் இது பற்றி எதையும் கதைக்கமுடியாது என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாங்குளம் பளை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பொலிசாரின் சோதனை நடவடிக்கைகளில் போது டிப்பர் லொறி மற்றும் பேருந்துகள் சிறிய ரக சொகுசு வாகனங்களில் மறைத்துக்கொண்டு செல்லப்படும்போது பிடிக்கப்பட்ட சட்;டவிரோத மரக்கடத்தல்கள் அதன் விசாரணைகளில் இருந்து இப்பகுதிகளில் வெட்டப்பட்டு கொண்டு வரப்படுவதாகவே அதிகம் காணப்படுகின்றன.என பொலிசார் தெரிவிக்கன்றனர்.
இவ்வாறான மிகவும் பின் தங்கிய மக்கள்வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத காடழிப்புக்கள் மரங்கள் வெட்டப்படுதல் கிரவல் மண் அகழ்வுகள் என்பன தடுக்கப்படவேண்டும் அல்லது மட்டுப்படுத்தப்படவேண்டும் என்பது இன்றைய சூழலில் தேவையான ஒன்றாக காணப்படுகின்றது.
வெளியிடங்களுக்கு விறகுத்தேவை என்ற போர்வையில் பெருமளவாக மரங்கள் அழிக்கப்பட்டு வகைதொகையின்றிக் கொண்டு செல்லப்படுகின்றன. அத்துடன் மரங்கள் கடத்தப்படுகின்றன. இவ்வாறு கடத்தப்படும் மரங்களில் ஒருசிலரே அது சார்ந்த அதிகாரிகளால் பிடிக்கப்படுகின்றன. இவைநிறுத்தப்பட வேண்டும என்பதே எல்லோரினதும் கோரிக்கையாகும்.
மாந்தைகிழக்கு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மரக்கடத்;தல்கள் மற்றும் மணல் அகழ்வுகள் தொடர்பாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களிம் தொடர்புகொண்டபோது குறித்த பிரதேச செயலாளர் அநாகரிகமற்ற முறையில் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டு பதில் தரமறுத்துவிட்டார்.
இந்தவிடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் தொடர்புகொண்டபோது சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்;துவதற்கு அது சார்ந்த அதிகாரிகளினூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளி மாவட்டங்களுக்கு இவ்வாறு மரங்கள் விறகு என்பன எடுத்துச் செல்;வதற்கான அனுமதிகள் எவையும் வழங்கப்படவில்லை. பார்வையற்ற ஒருவரின் வாழ்வாதாரத்திற்காக ஒரு தடைவ மாத்திரம் விறகினை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதே தவிர வேறு எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




