வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் முற்கம்பி வேலிகள் அமைத்துள்ளனர் : மாவை குற்றச்சாட்டு
வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் முற்கம்பி வேலிகளை அமைத்திருப்பதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் சந்தித்து பேசவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்ட காணிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கரையோர மற்றும் விவாசாய பிரதேசங்களில் இராணுவத்தினர் முற்கம்பி வேலிகளை அமைத்திருக்கின்றனர். இதனால் மக்கள் கடலுக்கு செல்ல முடியாதுள்ளது. விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் சந்தித்து பேசவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். -(3)




