செய்திகள்

வடக்கில் 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து தீர்மாமெடுங்கள் என ஜனாதிபதி யோசனை

வடக்கில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானமெடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதில்ல தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகவும் இவ்வேளையில் அந்த வீடமைப்பு திட்டம் தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் தீர்மானத்தை அறிவிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிவித்ததாக கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
n10