வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளை பொறுப்பேற்றார்
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆளுநர் செயலத்தில் உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.
இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்க்கு எதிராக அவரது அலுவலகத்துக்கு முன்பாக 6 பேர் கொண்ட குழுவினரால் போராட்டம் ஒன்று கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றது.
“ஊழல்வாதியான ஆளுநர் பி.எம்.எஸ். சாள்ஸை, ஜனாதிபதி உடனடியாகப் பதவி நீக்கம் செய்யவில்லை என்றால், ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம்” என்று போராட்டத்தில் கலந்துகொண்ட 6 பேரும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-(3)




