வடக்கு உட்பட பல பகுதிகளில் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
பல பகுதிகளில் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி இன்று புதன்கிழமை வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களிலும் வெப்பச் சுட்டெண் உயர்வு மட்டத்தில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக நீரிழப்பு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் சிலவற்றிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள இடங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிக நேரம் வெளியில் இருப்பது மற்றம் வேலைகளில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகள் கடுமையான சோர்வினை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றதுடன், நீரிழப்பு நோய் ஆபத்துக்கள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்
அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(15)




