வடக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்பாணத்திற்கு செல்லவுள்ளார்.
இதேவேளை இவருடன் தென்பகுதியிலிருந்து 80ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பிலிருந்து யாழ் தேவி புகையிரதம் மூலம் இவர்கள் வடக்கிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
மூன்று நாட்களுக்கு யாழ்பாணத்தில் தங்கியிருக்கும் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அங்குள்ள ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயவுள்ளனர். அத்துடன் அமைச்சின் ஏற்பாட்டில் அங்குள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவித்திட்டங்கள் பலவும் வழங்கப்படவுள்ளன.
15 வருடங்களுக்கு பின்னர் ஊடகத்துறை அமைச்சர் ஒருவர் வடக்கிற்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது என்பகு குறிப்பிடத்தக்கது.
 n10