வடக்கு- கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டி: அம்பாறையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது
எதிர்வரும் தேர்தலில் வடக்கி-கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடும் என்றும் அம்பாறை மாவட்டத்துக்கான வேட்பு மனுக்கள் ஏற்கனவே திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்துக்கான வேட்பு மனுக்கள் இறுதி நாளான 13 ஆம் திகதி அன்று செய்யப்படும் என்றும் ஏனைய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் நாட்களில் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
தமது தேர்தல் விஞ்ஞாபனம் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும் என்றும் தெரிவித்த அவர் கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களின் கொள்கைகளை கடைப்பிடித்து வந்த ஆற்றல் மிக்க நபர்களையே தேர்தலில் நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.




