வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீடு பூர்த்தி: தமிழரசுக்கட்சிக்கு அதிகளவான ஆசனங்கள்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீட்டை இன்று ஒருமித்து தீர்மானித்துள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு தொடர்பான கலந்துரையாடல் முடிவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஆசன ஒதுக்கீடு தொடர்பாக தெரிவிக்கையில் அவர் கூறியதாவது:
யாழ்ப்பாணத்தில் 10 இடங்களில் 6 இடங்கள் தமிழரசுக்கட்சி ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள் டெலோ 1 ஆசனம் புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வன்னி 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம் டெலோ 3 ஆசனம் ஈ.பி.ஆர். எல்.எப் 2 ஆசனம் புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் 7 தமிழரசுக்கட்சி 3 இடங்களுக்கும் டெலோ, ஈ.பி.ஆர். எல்.எப். புளொட் தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டதுள்ளது.
மட்டக்களப்பு 8 இடங்களில் தமிழரசுக்கட்சி 5 இடங்களிலும் டெலோ, ஈ.பி.ஆர். எல்.எப். புளொட் தலா 1 இடங்களிலும்
அம்பாறையில் 10 இடங்களில் 5 இடங்கள் தமிழரசுக்கட்சி ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள் டெலோ 2 ஆசனம் புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.




