செய்திகள்

வடக்கு, கிழக்கில் போதைப் பொருளுக்கு பின்னால் பாதுகாப்பு தரப்பு – ஏற்றுக்கொண்ட அமைச்சர்!

வடக்கு, கிழக்கில் போதைப் பொருளுடன் பாதுகாப்பு தரப்பினர் தொடர்புபட்டுள்ளதாக தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இராணுவமே போதைப் பொருளுக்கு பிரதான காரணமாகும். இதனால் எப்போது இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றப் போகின்றீர்கள் என்று கஜேந்திரகுமார் எம்.பி தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில்,

போதைப் பொருள் பிரச்சினைக்கு பின்னால் இராணுவம் மற்றும் பொலிஸ் இருப்பதாக கூறினீர்கள். அதில் உண்மை இருக்கின்றது. இராணுவமும் பொலிஸும் வேறு அல்ல. இது மாபியாக்களுடன் இணைந்துள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர். அந்த அரசியல்வாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார்.