வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களால் யாழில் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டியதாக யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்.நகரில் நாளை காலை 10.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தொடர்பாக சர்வதேச ஊடக அமைப்புகள் முன்பாக உடனடி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், ஊடகவியலாளர்கள் தம் பணியை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை சகல மட்டங்களிலும் உறுதிப்படுத்துதல், தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தல் வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
N5




