செய்திகள்

வடக்கு பாதுகாப்பு நிலை தொடர்பாக ஐ.நா. விஷேட அறிக்கையாளர் இராணுவத்துடன் பேச்சு

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா.வின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விஷேட அறிக்கையாளர் றிற்றா ஐசாக் நாடியா வடபகுதியில் பாதுகாப்பு நிலை தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் நேற்று கேட்டறிந்துகொண்டார்.

நாடியாவும், அவரது குழுவிலுள்ள மற்றும் இருவரும் யாழ்ப்பாணத்தில் யாழ். இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவை நேற்று சந்தித்து வடபகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டனர்.

வடபகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக மட்டுமன்றி, வடபகுதியில் அதிகளவில் இடம்பெறும் போதை வஸ்த்து கடத்தல், ஆட்கடத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.:06