வடக்கு மக்களின் போராட்டம் நியாயமானதே : இனவாதமாக பார்ப்பது தவறு என்கிறார் சிறிதுங்க ஜயசூரிய
வடக்கு மக்களின் போராட்டங்கள் நியாயமானது எனவும் அங்கு தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கும் காரணத்தினாலேயே மக்கள் வீதிக்கு இறங்கி எழுக தமிழ் போன்ற போராட்டங்களை நடத்துவதாகவும் இதனை இனவாத போராட்டம் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்று கொழும்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் போராட்டங்கள் நியாயமானது. அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாக இருந்தால் மக்கள் போராட மாட்டார்கள். ஆனால் தெற்கில் உள்ளோர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு கோரி போராடும் போதே அதே உரிமை வடக்கில் உள்ளவர்களுக்கும் இருக்கின்றது. அதனை இனவாதமாக பார்க்க கூடாது. எழுக தமிழ் நிகழ்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நியாயமானதே. நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




