வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் – இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
மேலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி செய்யும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.(15)




