செய்திகள்

வடக்கு முதல்வரின் கோரிக்கையை ஏற்க மாட்டோம் : வடக்கிலிருந்து எந்த இராணுவ முகாமும் நீக்கப்படாது என்கிறார் விஜேவர்தன

வடக்கு முதலமைச்சர் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தாலும் வடக்கில் இராணுவ முகாம்கள் நீக்கப்படாது என பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஹர்த்தால் , ஆர்ப்பாட்டங்களை நடத்தி இராணுவ முகாம்களை அகற்குமாறு கோருகின்றனர். இவர்களின் கோரிக்கை நியாயமற்றது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளாது. என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று ரன்தெபே பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் -(3)