செய்திகள்

வடக்கு முதல்வரின் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம் : மகிந்த அமரவீர

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சரின் கருத்துக்களும் , செயற்பாடுகளும் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு தடையாக இருப்பதாகவும் இவர் யாருடையதோ சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ளதாகவும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ நிகழ்வில் வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் , வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் , அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விக்கினேஸ்வரனால் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பாக ஊடகங்களுக் கருத்து வெளியிடும் போதே மகிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)