வடமராட்சி வல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்குமிழ்கள் இனம் தெரியாத கும்பலினால் கம்பத்துடன் திருட்டு
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதிகளில் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து , காணப்பட்டு வந்ததுடன் , அப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதனால் விபத்துக்களும் இடம்பெற்று வந்தன.அதனால் அந்த வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்துவோர் அச்சத்துடனையே பயணித்தனர்.
இதனால் கரவெட்டி பிரதேச சபையினால் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுதியான சூரிய சக்தியில் இயங்க கூடிய மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன.இந்நிலையில் வல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த வீதி மின் விளக்குகள் , இனம் தெரியாத கும்பலினால் அவற்றின் கம்பங்களுடன் அறுத்து எடுத்து செல்லப்பட்டுள்ளது.மின் கம்பங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் கரவெட்டி பிரதேச சபையினால் , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.(15)




