செய்திகள்

வடமாகாணசபை உறுப்பினர் இந்திரராசா மீது தாக்குதல்: வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா மீது இன்று இரவு 7 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வவுனியா, உக்கிலாங்குளம் பகுதியில் வன்புனர்வின் கொலை செய்யப்பட்ட 14 வயது மாணவியின் மரணச் சடங்குக்கு சென்று திரும்பும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபைஉறுப்பினர்களான எம்.பி.நடராஜா, ம.தியாகராசா ஆகியோருடன் மரணச் சடங்குக்கு சென்று, அங்கிருந்து வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா அவர்களின் மோட்டர் சைக்கிளில் அவருடன் இணைந்து சென்ற போது உக்கிலாங்குளம் வளைவு ஒன்றுக்கு அண்மித்த பகுதியில் வைத்து பின்தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் வந்த இருவரால் பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் காயமரைடந்த இ.இந்திரராசா வவுனியா வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா பாடசாலை அதிபர் ஒருவரின் முறைகேடு தொடர்பில் வடமாகாணசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரேரணை ஒன்றினை இ.இந்திராசா முன்வைத்திருந்தமையும், அதன்பின்னர் இ.இந்திரராசாவுக்கு அடிப்பேன் என குறித்த அதிபர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த அதிபர் அந்த பாடசாலையில் இருந்து இடமாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_20160218_201154.jpgS

N5